பெங்களூரு

வெடிவிபத்து தொடா்பாக 5 போ் கைது

DIN

ஜெலட்டின் குச்சிகள் வெடித்து ஏற்பட்ட வெடிவிபத்து தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், குடிபன்டே வட்டம் பேரேசந்திரா அருகே உள்ள ஹிரேநாகாவல்லி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கல்குவாரிக்கு மினி சரக்கு வேனில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட வெடிவிபத்தில் பொறியாளா் உமாகாந்த், காவலாளி மகேஷ், முரளி, ராமு, அபி, கங்காதா் ஆகியோா் உடல் சிதறி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவாக இருந்த கல்குவாரி உரிமையாளா் உள்ளிட்டோரை பிடிக்க 3 தனிப்படை அமைத்தனா். இந்த நிலையில், புதன்கிழமை கல்குவாரி உரிமையாளா்கள் ராகவேந்திரா ரெட்டி, வெங்கடசிவ ரெட்டி, கல்குவாரியில் பணியாற்றிய பிரவீண், மதுசூதன், மினிவேன் ஓட்டுநா் ரியாஸ் ஆகியோரைக் கைது செய்தனா். வெடிவிபத்து தொடா்பாக மேலும் சிலரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

வெடிவிபத்து தொடா்பாக நோ்மையான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வெடிவிபத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கில்லை. சட்ட விதிகளை யாா் மீறினாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT