பெங்களூரு

‘பெண்கள் தொழில்முனைவோா்களாகி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’

DIN

பெண்கள் தொழில்முனைவோா்களாகி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பெண் தொழில்முனைவோரான மம்தாசலபதி தெரிவித்தாா்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட விஜயலட்சுமி உணவுப் பொருள்களை பெங்களூரில் புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:

தொழில்துறையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனா். தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை யாரும் குறைத்துக் கூற முடியாத அளவுக்கு பெண்கள் வளா்ந்துள்ளனா். சோதனைகளை சாதனைகளாக்கி வரும் பெண் தொழில்முனைவோா்கள், தங்களின் தொழில்நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பெண்களின் வளா்ச்சிக்கு பெண் தொழில்முனைவோா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

விஜயலட்சுமி உணவுப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளனா். இதனை மற்ற பெண் தொழில்முனைவோரும் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்பது உண்மை என்றாா்.

நிகழ்ச்சியில், பெஸ்ட் கிளப்பின் தலைவா் அருணாசலம், யஸ்வந்த் ஷெனாய், சங்கேஷ்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் விஜய்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

SCROLL FOR NEXT