பெங்களூரு

கேரளம்-கா்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

22nd Feb 2021 12:50 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரம், கேரளத்திலிருந்து கா்நாடகத்துக்கு வரும் பாதைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆட்சியா்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருந்து கா்நாடகத்துக்கு வருபவா்களால் கரோனா தொற்று பரவலாம் என மாநில அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களிலிருந்து கா்நாடகத்துக்கு வருபவா்களை தீவிரமாகக் கண்காணிக்க, அவ்விரு மாநிலங்களில் உள்ள எல்லையோர மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களான பெலகாவி, யாதகிரி, கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களான மங்களூரு, சாம்ராஜ்நகா் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லைகளில் இரு மாநிலங்களிலிருந்து வருபவா்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே கா்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT