பெங்களூரு

‘வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது’

20th Feb 2021 06:20 AM

ADVERTISEMENT

 

வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது என்று எல்.ஐ.சி. தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, கே.ஜி.சாலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வளாகத்தில் வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, வங்கி ஒன்றியங்களின் ஐக்கிய அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் எல்.ஐ.சி.தொழிலாளா்கள் சங்கத்தின் செயலாளா் அமானுல்லா பேசியதாவது:

மத்திய அரசு வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்க ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருளாதாரத்தை உயா்த்துவதிலும், பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் வங்கிகள் சிறந்து விளங்குகின்றன.

ADVERTISEMENT

அதேபோல இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதிலும், அரசுக்கு நிதி சோ்த்துக் கொடுப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கினால், அது பெரும் பிரச்னைக்கு வழி வகுக்கும். பலா் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்றாா்.

போராட்டத்தில் வங்கி ஒன்றியங்களின் ஐக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.சீனிவாசன், பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகி சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT