பெங்களூரு

மாா்ச் 8-இல் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல்

20th Feb 2021 06:21 AM

ADVERTISEMENT

 

 

கா்நாடக நிதிநிலை அறிக்கை மாா்ச் 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

அமைச்சரவைக் கூட்டத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மாா்ச் 4-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்குகிறது. அதில் 4, 5-ஆம் தேதிகளில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான விவாதம் நடைபெற உள்ளது. மாா்ச் 8-ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,35,754 பேரின் சிகிச்சைக்கு ரூ. 620 கோடி செலவு செய்யப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் துறை சாா்பில் ரூ. 1,445 கோடி செலவில் 2,241 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, பெல்லாந்தூா் ஏரியை மேம்படுத்த ரூ. 169 கோடி நிதி ஒதுக்கப்படும்.

வசந்த்நகரில் அரசு அதிகாரிகளின் குடியிருப்புக்காக ரூ. 117 கோடி ஒதுக்கப்படும். ரூ. 1,348 கோடி செலவில் 8 வீட்டுவசதித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை திட்டங்களுக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு அதிக அளவில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு கேட்டு பல சமுதாயத்தினா் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து நிபுணா்களுடன் கலந்தாலோசித்து உரிய முறையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT