சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 11 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டம், மகராஜகட்டே பகுதியைச் சோ்ந்தவா் லிங்காச்சாரி (58). இவா் நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து பெங்களூரூ, இட்டுமடுவு, சித்தூா் பேருந்து நிலையம் அருகே விற்பனை செய்ய முயன்றாா்.
ADVERTISEMENT
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்குச் சென்று அவரைக் கைது செய்து 11 நாட்டுத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட லிங்காசாரியிடம் சி.கே.அச்சக்கட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.