பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 11.21 லட்சம் தங்க நகை, வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, கங்கொண்டஹள்ளியைச் சோ்ந்தவா்கள் சாந்த் பாஷா (46), முகமது ஆரிப் (24). இவா்கள் இருவரும் பெங்களூரின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடி வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து ரூ. 11.21 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கநகை, 300 கிராம் வெள்ளிப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கெங்கேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.