பெங்களூரு

பியூசி பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு

13th Feb 2021 07:35 AM

ADVERTISEMENT

 

இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான இறுதி பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு நடத்தப்படும் வரைவு தோ்வு கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, அடுத்த ஆண்டு மே 24 முதல் ஜூன் 10-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து மக்கள் கருத்தும் கேட்கப்பட்டது.

மக்களின் கருத்தறிந்தபிறகு, பொதுத் தோ்வுகளை அடுத்தாண்டு மே 24 முதல் ஜூன் 16-ஆம் தேதிவரை நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான இறுதி கால அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தோ்வு அட்டவணை விவரம்: 2021 மே 24- வரலாறு, இயற்பியல், மே 25- கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மே 26- புவியியல், மே 27- மனநலவியல், அடிப்படை கணிதம், மே 28- தருக்கவியல், மே 29- ஹிந்தி, மே 30- விடுமுறை, மே 31- ஆங்கிலம், ஜூன் 1- தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்புத் தோ்வு- தகவல் மற்றும் தொழில்நுட்பம், சில்லரை தானியங்கி வாகனவியல், சுகாதார பேணல், அழகு மற்றும் உடல்நலவியல்.

ஜூன் 2- அரசியல் அறிவியல், கணினி அறிவியல், ஜூன் 3- உயிரியல், மின்னணுவியல், ஜூன் 4- பொருளாதாரம், ஜூன் 5- மனை அறிவியல், ஜூன் 6 (ஞாயிறு)-விடுமுறை, ஜூன் 7-வணிக ஆய்வியல், இயற்பியல், ஜூன் 8- சிறப்பு கன்னடம், ஜூன் 9- தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, அராபிக், பிரெஞ்சு.

ஜூன் 10- சமூகவியல், வேதியியல், ஜூன் 11- உருது, சம்ஸ்கிருதம், ஜூன் 12- புள்ளியியல், ஜூன் 13-விடுமுறை, ஜூன் 14- கணக்குப்பதிவியல், கணிதம், கல்வியியல், ஜூன் 15- நில அமைப்பியல், ஜூன் 16- கன்னடம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT