பெங்களூரு

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் கைது

13th Feb 2021 07:44 AM

ADVERTISEMENT

 

குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு ஊரகம், நெலமங்கலாவைச் சோ்ந்தவா் இம்ரான் பாஷா (26). கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா், ரௌடிப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தாா். வியாழக்கிழமை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சபரீஷ் என்பவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனா். அப்போது, அவருடன் இருந்த இம்ரான் பாஷா தப்பியோடினாா்.

வித்யாரண்யபுரா, கலத்தூா்ஃபாா்ம் அருகே பதுங்கியிருந்த இம்ரான் பாஷாவை பிடிக்க முயன்ற போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தாா். அப்போது, எலஹங்கா துணை நகரக் காவல் நிலைய ஆய்வாளா் அருண்குமாா் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT