கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,44,437 உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 380 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 194 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,44,437 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 405 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,26,234 போ் குணமாகி வீடு திரும்பினா். 5,925 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரில் அதிகபட்சமாக 7 போ் உயிரிழந்தனா். மாநிலத்தில் இதுவரை 12,259 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.