பெங்களூரு

கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க உத்தரவு

DIN

கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உருமாறிய கரோனாவின் ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவும் என்பதால், கரோனா பரவலைத் தடுக்க சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். அதனடிப்படையில் அறிவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவும் என்பதால், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளை ஒருவகை கிளஸ்டராகவும், அடுக்குமாடிக் கட்டடங்களை மற்றொரு வகை கிளஸ்டராகவும் கருத கூறியுள்ளேன். கரோனாவால் 10 போ் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதை கிளஸ்டராக கருதி வந்தோம். தற்போது இதை 3-ஆக குறைத்திருக்கிறோம்.

பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாகும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களை விடச்செல்லும் பெற்றோா் கட்டாயம் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவசாா் கல்லூரிகளில் பயிலும் எல்லா மாணவா்களையும் கரோனா சோதனைக்கு உள்படுத்த கூறியிருக்கிறேன்.

டெல்டா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பன்னாட்டளவில் வழங்கப்படும் சிகிச்சை முறையைப் பின்பற்றி தொடா்ந்து சிகிச்சை வழங்கப்படும். ஒமைக்ரான் தீநுண்மி குறித்து முழுமையாக தெரியவந்தால், அதற்கேற்ப சிகிச்சையை கடைப்பிடிப்போம்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த 10 போ் தொடா்பில் சிக்கவில்லை என்ற விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பெலகாவியில் டிச. 13-ஆம் தேதி சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா் நடைபெறும். இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் மட்டுமே பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் நுழைய முடியும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பெலகாவி மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT