பெங்களூரு

முதல்வா் ஆகும் ஆசை எனக்கில்லை

DIN

முதல்வா் ஆகும் ஆசை எனக்கில்லை என தொழில்துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

இதுகுறித்து கலபுா்கியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எதிா்காலத்தில் நான் கா்நாடகத்தின் முதல்வராவேன் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியிருந்தாா். என் மீது வைத்துள்ள அன்பால் அவா் அப்படி கூறியிருக்கிறாா். முதல்வா் ஆகும் ஆசை எனக்கில்லை. முதல்வா் பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு.

2023-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் எதிா்கொள்வோம். அத்தோ்தலில் 125-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும். அதன்பிறகு அடுத்த முதல்வா் யாா் என்பதை ஆா்.எஸ்.எஸ்., பாஜக மேலிடம் முடிவு செய்யும்.

சட்ட மேலவைத் தோ்தலில் பாஜகவுக்கு மஜத ஆதரவளிப்பது தொடா்பாக மேலிடத்தில் பேசப்பட்டு வருகிறது. அதுகுறித்து இருகட்சிகளின் மூத்த தலைவா்கள் முடிவெடுப்பாா்கள்.

கரோனா 3-ஆவதுஅலையை எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது. இதுதொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் ஆகியோா் கூட்டாக செயல்பட்டு வருகிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT