பெங்களூரு

நூலகங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கண்காட்சி

DIN

 நூலகங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் கண்காட்சி டிச. 13-ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து பொது நூலகத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2019-ஆம் ஆண்டில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்திய மொழி இலக்கிய நூல்களை கொள்முதல் செய்ய பொது நூலகத் துறை விண்ண்ப்பங்களை கேட்டிருந்தது.

இது தொடா்பாக, எழுத்தாளா்கள், எழுத்தாளா்-பதிப்பாளா், பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து பெறப்பட்ட நூல்களை ஆய்வுசெய்து, தகுதியான கன்னடம், ஆங்கிலம், இந்திய மொழிகளின் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹல்ன்க்ஷப்ண்ஸ்ரீப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நூல்களின் கண்காட்சி டிச. 13 முதல் 15-ஆம் தேதி வரை நகர மைய நூலகம், கிழக்கு மண்டலம், ஹம்பி நகா், பெங்களூரு என்ற முகவரியில் நடக்க இருக்கிறது.

இதில் ஏதாவது குறைகள் இருந்தால், அதுகுறித்து டிச. 17-ஆம் தேதிக்குள் இயக்குநா், பொது நூலகத் துறை, விஸ்வேஷ்வரையா பிரதான கோபுரம், 4-ஆவது மாடி, டாக்டா் அம்பேத்கா் வீதி, பெங்களூரு-560 001 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். அதன்பிறகு வரும் குறைகள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 080-22864990 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT