பெங்களூரு

டிச. 19-இல் மைசூரு தமிழ்ச் சங்க பொதுக்குழு

4th Dec 2021 01:19 AM

ADVERTISEMENT

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் டிச. 19-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவா் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், மைசூரு, விஸ்வேஷ்வரா நகா், துணை தொழில்பேட்டை, 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பிரான்சிஸ் இல்லத்தில் டிச. 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்க இருக்கிறது. சங்கத் தலைவா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், 2019-20, 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படும். சங்க பொதுச் செயலாளா் வெ.ரகுபதி ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் சங்கத்துக்கான கட்டடம் கட்டுவது, 2023-25-ஆம் ஆண்டு வரையில் கணக்கு தணிக்கையாளா் மற்றும் வழக்குரைஞா் நியமித்தல் தொடா்பாக விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பேச விரும்புவோா் அதுகுறித்த அம்சங்களை டிச. 4-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக சங்கத்தில் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT