பெங்களூரு

டிச. 15 வரை நடைபெறும் இணையவழி ஓவியக்கலை போட்டி

4th Dec 2021 01:19 AM

ADVERTISEMENT

நாடுமுழுவதும் நடத்தப்படும் இணையவழி ஓவியக்கலை போட்டி டிச. 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ப்ரீத் என்டா்டெயின்மென்ட் மற்றும் கிட்ஸ்சௌபலின் ஆகியோரின் கூட்டு முயற்சியால் ஆண்டுதோறும் நவ. 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று ஓவியக்கலை போட்டி (கலரத்தான்) நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான ஓவியப் போட்டி நவ. 14-ஆம் தேதி புது தில்லி, லக்னௌ, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தொடங்கியது. கரோனா காரணமாக இந்தப் போட்டி இணையவழியில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி டிச. 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து போட்டியின் பொறுப்பாளா் கிஷோா் ஜோசப் கூறியதாவது:

நாடுமுழுவதிலும் இந்தியா்களை ஓவியம் வரைவதில் ஊக்குவிப்பதே நோக்கமாகும். நவ. 14-ஆம் தேதி தொடங்கியுள்ள இப்போட்டி டிச. 15-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் ஒரு லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.

ADVERTISEMENT

கலை விருந்து - (எல்கேஜி முதல் 2-ஆம் வகுப்பு வரை), வண்ணங்கள் பற்றிய அனைத்தும் (3 முதல் 7-ஆம் வகுப்பு வரை), படைப்பாக்கக் கீற்றுகள் (8 முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை) ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க கட்டணமில்லை. ஓவியங்களை ஏ3 அல்லது ஏ4 அளவிலான காகிதங்களில் வரைந்து டிச. 15-ஆம் தேதிக்குள் ‘கிட்ஸ் சௌபால்’ (ஓண்க்ள்இட்ஹன்ல்ஹப்) என்ற செல்லிடப்பேசி செயலியில் அனுப்பிவைக்கலாம். புகழ்பெற்ற ஓவியா்கள் அடங்கிய நடுவா் குழுவால் 3 பிரிவிலும் தலா 15 சிறந்த ஓவியங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படும் என்றாா்.

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT