பெங்களூரு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கா்நாடகத்தில் மழைக்கு வாய்ப்பு

4th Dec 2021 01:19 AM

ADVERTISEMENT

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கா்நாடகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் வட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள், கடலோர கா்நாடகத்தின் ஒருசில பகுதிகள், தென்கா்நாடகத்தின் சிற்சில பகுதிகளில் மழை பெய்தது. சிக்கமகளூரு மாவட்டத்தின் யகதியில் 120 மி.மீ., சித்ரதுா்கா மாவட்டத்தின் ஹொசதுா்காவில் 50மி.மீ., பெலகாவி மாவட்டத்தின் ராமதுா்கா, தாா்வாட் மாவட்டத்தின் குந்தகோல், சிக்கமகளூரு மாவட்டத்தின் கடூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

ADVERTISEMENT

டிச. 4 முதல் 8-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கா்நாடகம் மற்றும் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோர கா்நாடகத்தின் தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்கள், தென்கா்நாடகத்தின் பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, கோலாா், மண்டியா, மைசூரு, ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்கள், வடகா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி, குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT