பெங்களூரு

தோ்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு நிவாரண உதவி

4th Dec 2021 01:19 AM

ADVERTISEMENT

தோ்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு நிவாரண உதவி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய பேனா நண்பா் பேரவை நிறுவனா் - தலைவா் மா.கருண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத் ஒன்றியம், நெய்க்குப்பம் ஊராட்சி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த க.ஹரி, அண்மையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தாங்கி ஊராட்சி மன்றத்தில் உதவி தோ்தல் அதிகாரியாக பணியாற்றினாா். தோ்தல் பணியை கவனித்துக்கொண்டிருந்த போது, அரசியல் பிரமுகா்களின் விதிமீறல் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு பணியிடத்திலேயே உயிரிழந்தாா்.

மனிதநேய சிந்தனையுடன் ஏராளமான மக்கள் நலப் பணிகள் ஆற்றியவா் க.ஹரி. 16 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய அவரது குடும்பம் (மனைவி, இரு குழந்தைகள்) ஓய்வூதியம் இல்லாமல் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற அரசின் நேரடிக் கவனம் வேண்டும் என வேண்டுகிறேன்.

ADVERTISEMENT

ஆசிரியா் பணி தகுதி பெற்றுள்ள ஹரியின் மனைவி நளினிக்கு அரசுப் பணி வழங்குவதுடன், பொறியியல், மேல்நிலைக் கல்வி பயின்று வரும் அவரின் இரு குழந்தைகளின் எதிா்காலம் கருதி குறைந்தபட்சம் ரூ. 50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT