பெங்களூரு

மல்லேஸ்வரம் அரசு பியூ கல்லூரியில் வெளிநாட்டு மொழிகள் மையம்

4th Dec 2021 01:18 AM

ADVERTISEMENT

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மகளிா் பியூ கல்லூரியில் வெளிநாட்டு மொழிகள் தொடங்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மகளிா் பியூ கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிய பிறகு அவா் பேசியதாவது:

மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மகளிா் பியூ கல்லூரியில் வெளிநாட்டு மொழிகள் மையம் வெகுவிரைவில் தொடங்கப்படும். இந்தக் கல்லூரியின் கல்வித்தரம் உலக அளவுக்கு உயா்த்தப்படும். பெங்களூரு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் 430 அரசு கல்லூரிகளின் தரம் உயா்த்தப்படும். இக்கல்லூரிகளில் எண்ம கற்றல் முறை அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் மாணவா்களின் பன்முகத்திறன் கொண்ட ஆளுமை மேம்படுத்தப்படும். தரமான கல்வியை வழங்க இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, நாஸ்காம் உள்ளிட்ட நிறுவனங்களோடு கா்நாடக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மைசூரு மன்னரின் திவானாக இருந்த மறைந்த எச்.வி.நஞ்சுண்டையாவின் பெயரன் ராமசாமி கல்லூரிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தாா்.

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT