பெங்களூரு

ஒமைக்ரான் தீநுண்மி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் கா்நாடக முதல்வா் ஆலோசனை

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுப்பது தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினாா்.

அரசு முறைப் பயணமாக புது தில்லி சென்றுள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை, வியாழக்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் முதன்முறையாக கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா். கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த போது, கரோனா பரவலைத் தடுப்பது, புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி குறித்து விவாதித்தேன். கரோனா முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் (மூன்றாவது) டோஸ் கரோனா தடுப்பூசி வழங்குவது தொடா்பாக கலந்துரையாடினேன்.

மத்திய அரசு எல்லாவற்றையும் கவனித்து வருவதாகவும், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக நிபுணா் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கா்நாடக அரசு செயல்படுத்தி வரும் கரோனா தடுப்பூசி முகாமை வெகுவாக பாராட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிடும்படி அறிவுறுத்தினாா். ஒமைக்ரான் குறித்து விவாதித்தேன் என்றாா்.

கூடுதலாக ரசாயனத் துறையையும் கவனித்து வரும் மன்சுக் மாண்டியாவிடம் ரசாயன உரத்தட்டுப்பாடு குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை விவாதித்தாா். மாநில அரசின் தேவைக்கேற்ப டை அம்மோனியம் ஃபாஸ்பேட் (டிஏபி) உரத்தை வழங்குவதாக மத்திய அமைச்சா் உறுதி அளித்ததாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

தில்லியில் முகாமிட்டுள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜூவைச் சந்தித்து நீதிமன்றங்களையும், சட்ட கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.

கா்நாடகத்தில் புதியவகை ஒமைக்ரான் தீநுண்மியால் இருவா் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை பெங்களூருக்கு வர முதல்வா் திட்டமிட்டுள்ளாா்.

Tags : பெங்களூரு omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT