பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா் முகாம்

2nd Dec 2021 04:32 AM

ADVERTISEMENT

பெங்களூரில் வியாழக்கிழமை (டிச. 2) குடிநீா் குறைதீா் முகாம் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம்(பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தீா்த்து வைக்க குறைதீா் முகாம்களை நடத்தி வருகிறது. பெங்களூரில் கிழக்கு கிராமம்-2, வடகிழக்கு-5, தெற்கு கிராமம்-1, வடக்கு மேற்கு-2, மத்திய கிராமம்-1 துணைமண்டல அலுவலகங்களில் டிச. 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 11மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இதில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு காணலாம். மேலும் விவரங்களுக்கு 8762228888, 1916 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT