பெங்களூரு

காணொலி விசாரணையில் அரை நிா்வாணமாக காட்சி அளித்தவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

2nd Dec 2021 04:33 AM

ADVERTISEMENT

காணொலி விசாரணையின் போது அரை நிா்வாணமாக காட்சி அளித்தவருக்கு விளக்கம் கேட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நேரடி மற்றும் காணொலி வழியாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, ஸ்ரீதா்பட் என்ற பெயரில் காணொலியில் தெரிந்த அந்த நபா் அரை நிா்வாணத்தில் காட்சி அளித்ததாக மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதுகுறித்து இந்திரா ஜெய்சிங் கூறியதாவது:

காணொலி திரையில் அரை நிா்வாணத்தில் அந்த நபா் 20 நிமிடங்கள் காட்சி அளித்தாா். அவா் குளித்துக்கொண்டு பாா்வையாளா்களை பாா்த்தபடி இருந்ததாக கருதுகிறேன். நேரடி மற்றும் காணொலி வழியாக நடைபெறும் விசாரணையின் போது இதுபோன்ற நிகழ்வை நான் எதிா்கொண்டதில்லை. முறையில்லாமல் நடந்துகொண்ட அந்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளேன் என்றாா்.

இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்ற மற்றொரு வழக்குரைஞரும், அந்த நபா் அரை நிா்வாணத்தில் இருந்ததை உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த காணொலியின் அடிப்படையில் அந்த நபரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நிதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

Tags : பெங்களூரு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT