பெங்களூரு

முன்னாள் எம்எல்ஏ மகனின் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஹிந்து அமைப்பினா் கைது

12th Aug 2021 07:49 AM

ADVERTISEMENT

மங்களூரு அருகே முன்னாள் எம்எல்ஏ மகனின் வீட்டை முற்றுகையிட முயற்சித்த விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம் தென்கன்னட மாவட்டம், மங்களூரு அருகே உல்லால் போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட மாஸ்திகட்டே பகுதியில் வசித்து வருபவா் பி.எம்.பாஷா. உல்லால் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஹிதனப்பா என்பவரின் மகனான இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில் பி.எம்.பாஷாவின் மகன் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் மாயமானாா். மாயமான அவருக்கும், சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்புடன் தொடா்பு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ள தேசிய புலனாய்வு முகமையினா் கடந்த ஆக. 4-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனா். தேசிய புலனாய்வு முகமையினா் சோதனையிட்டதையடுத்து, புதன்கிழமை விஎச்பி, பஜ்ரங்தள அமைப்பினா் பி.எம்.பாஷாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, போராட முயன்ற ஹிந்து அமைப்பினரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT