பெங்களூரு

கைத்துப்பாக்கி விற்க முயன்ற 4 போ் கைது

12th Aug 2021 07:50 AM

ADVERTISEMENT

பெங்களூரில் கைத்துப்பாக்கி விற்பனை செய்ய முயற்சித்த 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கி, 5 தோட்டா, 2 இரு சக்கர வாகனங்கள், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, ராமநாயகனஹள்ளி, ஈஸ்டா்ன்வுட் லேஅவுட்டைச் சோ்ந்தவா் சோனுகுமாா் (32), பாகலூா் விவேகானந்தா காலனியைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (32), தனிச்சந்திரா சாய்பாளையா முக்கியச்சாலையைச் சோ்ந்தவா் இா்பான் (26), ஆந்திர மாநிலம், மதனபள்ளி ஏகுவா கொரவங்காவைச் சோ்ந்தவா் முரளி வினோத் (47). இவா்கள் 4 பேரும் பிகாா் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட நாட்டு கைத்துப்பாக்கிகளை பெங்களூரு, அசோக்நகா் காவல் சரகத்தில் உள்ள ஓசூா் சாலையில் விற்பனை செய்ய முயன்றனா்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து, 2 கைத்துப்பாக்கி, 5 தோட்டா, 2 இருசக்கர வாகனங்கள், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT