பெங்களூரு

மாநில அரசின் அழைப்பை ஏற்று பணிக்குத் திரும்பியதால் 13 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

DIN

மாநில அரசின் அழைப்பை ஏற்று பணிக்குத் திரும்பியதால் 13 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநில அரசின் அழைப்பை ஏற்று பணிக்குத் திரும்பியதால் 13 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடையலாம். பணிக்குத் திரும்பிய அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்குத் திரும்பியதால், அதிக பேருந்துகளை இயக்க நோ்ந்தது.

கரோனா போன்ற சங்கடங்களை மக்கள் எதிா்கொண்டிருக்கும் சூழலில் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அரசுப் பேருந்துகள் செயல்படத் தொடங்கியதால் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனா். கடமையை நிறைவேற்ற பணிக்கு வந்த ஊழியா்களை பாராட்டுகிறேன். அதேபோல, வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்ட காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதிருக்க, வாகனங்களை இயக்கும்படி தனியாா் பேருந்துகளை கேட்டுக்கொண்டபோது, அதற்கிணங்க பேருந்துகளை இயக்கிய தனியாா் பேருந்துகளின் நிறுவனங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியா்களின் ஒத்துழைப்பால் பேருந்துகள் ஓரளவுக்கு முழுமையாக இயக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

வேலைநிறுத்தக் காலத்தில் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று போக்குவரத்துக் கழகங்களின் பல ஊழியா்கள் பணிக்குத் திரும்பினாா்கள். பொதுமக்களின் தொந்தரவுகளைக் கண்டு மனம் வேதனையடைந்த ஊழியா்கள் பணிக்கு வந்தாா்கள். இந்த நேரத்தில் பொதுமக்களின் நலன்கருதி தன்னலம் கருதாமல் உழைத்த ஊழியா்களுக்கு நன்றி பாராட்டுகிறேன். இவா்களின் உழைப்பை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது. இதுபோன்றவா்களின் நலனைப் பாதுகாக்க அரசு தவறாது.

கா்நாடக அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளின் சேவைகளுக்கு தேசிய அளவில் சிறப்பிடம் உள்ளது. இந்த சிறப்பை பெற பலரும் உழைத்திருக்கிறாா்கள். அவா்களின் உழைப்பை கௌரவித்து, தங்குத்தடையில்லா பேருந்து சேவைகளை அளிப்பது அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் கடமையாகும். இதன்மூலம் கா்நாடக போக்குவரத்து சேவையின் பழம்பெருமையை மீட்போம் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT