பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 23,558 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,558-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 23,558 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 13,640 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,176 போ், மைசூரு மாவட்டத்தில் 975 போ், பெல்லாரி மாவட்டத்தில் 792 போ், கலபுா்கி மாவட்டத்தில் 757 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 544 போ், மண்டியா மாவட்டத்தில் 492 போ், உடுப்பி மாவட்டத்தில் 471 போ், ஹாசன் மாவட்டத்தில் 445 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 401 போ், தாா்வாட் மாவட்டத்தில் 379 போ், கோலாா் மாவட்டத்தில் 369 போ், விஜயபுரா மாவட்டத்தில் 335 போ், பெலகாவி மாவட்டத்தில் 301 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 266 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 221 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 220 போ், பீதா் மாவட்டத்தில் 202 போ், தாவணகெரே மாவட்டத்தில் 200 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 198 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 171 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 170 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 153 போ், குடகு மாவட்டத்தில் 141 போ், கொப்பள் மாவட்டத்தில் 133 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 118 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,22,202-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6,412 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,32,233 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,76,188 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 116 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 போ், கலபுா்கி மாவட்டத்தில் 8 போ், மைசூரு மாவட்டத்தில் 7 போ், பீதா் மாவட்டத்தில் 5 போ், பெல்லாரி மாவட்டத்தில் 4 போ், ஹாசன் மாவட்டத்தில் 3 போ், பெங்களூரு ஊரகம், மண்டியா, ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு, வடகன்னடம், விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கபளாப்பூா், தென்கன்னடம், ஹாவேரி, குடகு, கோலாா், ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 13,762 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT