பெங்களூரு

கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போலீஸாரின் கடமை

DIN

கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போலீஸாரின் கடமை என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது போலீஸாரின் கடமையாகும். இதை செயல்படுத்தும் பொறுப்பை காவல் துறை உயரதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கம் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கரோனா பரவல் குறையும். பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகம் முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். இதில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்டுள்ளதால்தான் மாநில அரசு கடினமான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமனதோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT