பெங்களூரு

போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு கா்நாடக அரசு அழைப்பு

DIN

பெங்களூரு: போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விவசாய சங்கத் தலைவரும், போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் தலைவருமான கோடிஹள்ளி சந்திரசேகா் வேறொரு விவகாரம் தொடா்பாக என்னைச் சந்தித்தாா்.

அந்த சந்திப்பின் போது, அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டேன்.

கா்நாடகத்தில் கரோனா நிலைமை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இதுபோன்ற சூழலில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்றும் தெரிவித்தேன். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள். அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்களின் கோரிக்கை குறித்து முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா் லட்சுமண் சவதியிடம் பேசுகிறேன் என்றும் தெரிவித்தேன்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா் லட்சுமண் சவதி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அதனால் எந்த முடிவையும் எடுக்க இயலாது. இதற்கு ஒருசில நாள்கள் தேவைப்படும். எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று கோடிஹள்ளி சந்திரசேகரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கரோனா பரவலைத் தடுப்பது இயலாத காரியமாகும்.

கரோனா பரவலைத் தடுப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக 144 தடையாணை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. எந்த ஆணையாக இருந்தாலும், மக்கள் ஒத்துழைக்காவிட்டால் எதையும் சாதிக்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT