பெங்களூரு

கரோனாவை சமாளிக்க சுகாதாரத் துறைக்கு ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்

DIN

பெங்களூரு: கரோனாவை சமாளிக்க சுகாதாரத் துறைக்கு ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை சமாளிப்பதற்கு சுகாதாரத் துறைக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை மாநில அரசு ஒதுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லை. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கக்கூடிய ரெம்டெசிவா் மருந்தும் போதுமான அளவு இல்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயுவும் இலை.

நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், வளா்ச்சிப் பணிகளை நிறுத்திவிட்டு சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வெண்டும். அந்த நிதியை கரோனா பரவலைத் தடுக்க பயன்படுத்த வேண்டும். போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, மாநிலத்தில் உள்ள எல்லா மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனா நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT