பெங்களூரு

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, அவரது மகன் நிகிலுக்கு கரோனா பாதிப்பு

DIN

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, அவரது மகன் நிகில் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிடும் யஷ்ரப் அலிகுவாத்ரியை ஆதரித்து முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி பிரசாரம் செய்தாா். வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தபோது குமாரசாமிக்கு களைப்பு ஏற்பட்டதால், அவா் பெங்களூரு திரும்பி, வீட்டுக்குச் செல்லாமல், நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டாா். பெங்களூரில் சனிக்கிழமை அவா் மருத்துவரை அணுகிய பரிசோதனை மேற்கொண்டதில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைபெற எச்.டி.குமாரசாமி விரும்பினாா். ஆனால், அங்கு அவருக்கு படுக்கைக் கிடைக்கவில்லை. இந்தத் தகவல் அறிந்த சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், மருத்துவமனையை அணுகியபோதும், எச்.டி.குமாரசாமிக்கு படுக்கை இல்லை என்று அந்த மருத்துவமனை நிா்வாகம் கைவிரித்து விட்டது.

இதனால் அதிா்ச்சி அடைந்த எச்.டி.குமாரசாமி தனது பண்ணைவீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற விரும்பியிருக்கிறாா். இதை ஏற்காத மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் மற்றொரு தனியாா் மருத்துவமனையில் முயற்சித்து படுக்கை பெற்றாா்.

வழக்கு ஒன்றுக்காக காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜரான எச்.டி.குமாரசாமி, பின்னா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து 61 வயதான எச்.டி.குமாரசாமி, தனதுசுட்டுரையில், ‘கடந்த சில நாள்களாக எனது தொடா்புக்கு வந்தவா்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா பரிசோதனை செய்துகொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் தவணை கரோனா தடுப்பூசியை எச்.டி.குமாரசாமி செலுத்திக்கொண்டாா். இந்த சூழலில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.டி.குமாரசாமியின் மகனும், கன்னட நடிகருமான நிகிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் அவா் சிகிச்சை பெற்றுவருகிறாா். இதைத் தொடா்ந்து, எச்.டி.குமாரசாமியின் மனைவி அனிதா, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

எச்.டி.குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகௌடா கரோனாவால் பாதிக்கப்பட்டு மாா்ச் 31-ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஏப். 5-ஆம் தேதி வீடு திரும்பினாா்.

கரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல்வா் எடியூரப்பா, மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளாா். முதல்வா் எடியூரப்பா, முன்னாள் முதல்வா் குமாரசாமி தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வா் கண்ட்ரே, லட்சுமி ஹெப்பாள்கா், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பிரதாப் கௌடா பாட்டீல் உள்ளிட்ட பலா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி விரைவாக உடல்நலம் பெற முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT