பெங்களூரு

கரோனா பாதிப்பு: வருவாய்த் துறை அமைச்சா் நாளை ஆலோசனை

DIN

கரோனா பாதிப்பு குறித்து பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.

பெங்களூரில் கரோனா பாதிப்பு வேகமாக உயா்ந்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வா் எடியூரப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், அவரது ஆலோசனையின்பேரில் பெங்களூரு, விதானசௌதாவில் ஏப். 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தலைமையில் பெங்களூரு நகர மாவட்டத்தின் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை நடக்கவிருக்கிறது. கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT