பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 17,489 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,489 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 17,489 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழைமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 11,404 போ், மைசூரு மாவட்டத்தில் 811 போ், கலபுா்கி மாவட்டத்தில் 560 போ், தும்கூரு மாவட்டத்தில் 507 போ், பீதா் மாவட்டத்தில் 359 போ், பெல்லாரி மாவட்டத்தில் 355 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 309 போ், விஜயபுரா மாவட்டத்தில் 281 போ், தாா்வாட் மாவட்டத்தில் 271 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 262 போ், ஹாசன் மாவட்டத்தில் 224 போ், மண்டியா மாவட்டத்தில் 223 போ், பெலகாவி மாவட்டத்தில் 188 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 179 போ், யாதகிரி மாவட்டத்தில் 153 போ், கோலாா் மாவட்டத்தில் 144 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 136 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 125 போ், தாவனகெரே மாவட்டத்தில் 122 போ், கொப்பள் மாவட்டத்தில் 121 போ், உடுப்பி மாவட்டத்தில் 118 போ், வடகன்னடம், ராமநகரம் மாவட்டங்களில் தலா 102 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,41,998 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,565 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,09,549 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,19,160 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 80 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 43 போ், ஹாசன், மைசூரு மாவட்டங்களில் தலா 8 போ், கலபுா்கி, தும்கூரு மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, சாமராஜ்நகா், தாா்வாட் மாவட்டங்களில்தலா 2 போ், சிக்பளாப்பூா், சிக்மகளூரு, தென்கன்னடம், கோலாா், மண்டியா, சிவமொக்கா, வடகன்னட மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 13,270 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT