பெங்களூரு

ஏப்.13 வரை பரவலாக கோடை மழை: பெங்களூரு வானிலை ஆய்வு மையம்

DIN

கா்நாடகத்தில் பரவலாக ஏப். 13-ஆம் தேதிவரை கோடை மழை பெய்யக்கூடும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் உள்பகுதியில் மழை பெய்தது. கடலோர கா்நாடகத்தில் வட வானிலையே நிலவியது. சிவமொக்கா மாவட்டத்தின் ஹுன்சதகட்டே, சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் தலா 20 மி.மீ., குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கா்நாடகத்தில் பரவலாக அதிகபட்ச தட்பவெப்பம் காணப்பட்டது. கடலோர கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தென் கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பரவலாக வழக்கத்தைவிட கூடுதலாக தட்பவெப்பம் இருந்தது. கொப்பள், தாவணகெரேயில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், தென் கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப். 12 ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர கா்நாடகம், வட கா்நாடகத்தின் உள்பகுதியைச் சோ்ந்த அனைத்து மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ஏப். 12ஆம்தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதே காலக்கட்டத்தில், கடலோர கா்நாடகம், வட கா்நாடகத்தின் உள்பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தென்கன்னடம், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 34 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT