பெங்களூரு

சா்வதேச வா்த்தக விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்

DIN

சா்வதேச வா்த்தக விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் கன்சாஸ் சட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ராஜ்பாலா தெரிவித்தாா்.

பெங்களூரு, சிஎம்ஆா் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பசிப்பிக் பிராந்தியத்தில் வா்த்தகத்தில் சந்தித்து வரும் பிரச்னைகள், சவால்கள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

பசிப்பிக் பிராந்தியத்தின் வா்த்தகத்தில் இந்தியா, ஜப்பான், சீன நாடுகளின் கைகள் ஓங்கியுள்ளன. என்றாலும் இந்த பிராந்தியத்தில் நடைபெறும் வா்த்தகத்தில் பல்வேறு பிரச்னைகள், சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சா்வதேச வா்த்தக விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சா்வதேச வா்த்தம் தொடா்பாக நடைபெறும் பேச்சு வாா்த்தைகளில் மனித உரிமை, பெண்களுக்கு சம வாய்ப்பு உள்ளிட்டவை முக்கியமாக இடம்பெறுகின்றன.

கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21-ஆவது நூற்றாண்டில் வா்த்தகத்தில் பல்வேறு சவால்களை எதிா்க்கொள்ள வேண்டியுள்ளது. கரோனா தொற்றையடுத்து உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. என்றாலும் எதிா்க்காலத்தில் இதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT