பெங்களூரு

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்: பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

9th Apr 2021 07:03 AM

ADVERTISEMENT

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தையொட்டி, பெங்களூரிலிருந்து வெளியூா்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதன்கிழமை (ஏப். 7) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், பெங்களூரிலிருந்து வெளியூா்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், தென்மேற்கு ரயில்வே நிா்வாகத்திடம் பெங்களூரிலிருந்து வெளியூா்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனை ஏற்ற தென்மேற்கு ரயில்வே நிா்வாகம், ஏப். 9, 10-ஆம் தேதிகளில் பெலகாவி, கலபுா்கி, காா்வாா், பீதா், விஜயபுரா, சிவமொக்கா உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, பெலகாவி, கலபுா்கி, காா்வாா் ஆகிய நகரங்களுக்கு தலா 2 ரயில்கள், பீதா், விஜயபுரா, சிவமொக்கா ஆகிய நகரங்களுக்கு தலா ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT