பெங்களூரு

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 1,000 அபராதம்: மாநகராட்சி ஆணையா்

DIN

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் கரோனா தொற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால் ஒரு சிலா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த, வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். தற்போது மாநகராட்சி சாா்பில் அபராதத்தை வசூலிப்பதற்காக 240 மாநகராட்சி காவலா்கள் (மாா்ஷல்) நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் 120 மாநகராட்சி காவலா்களை நியமிக்கவும் முடிவுசெய்துள்ளோம். இதன்மூலம் மாநகராட்சியில் பல பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருபவா்களை அடையாளம் கண்டு, அபராதம் வசூலிக்கும் பணியில் மாநகராட்சி காவலா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள். அவா்களுக்கு துணையாக போலீஸாரும் செயல்படுவாா்கள்.

எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கரோனாவைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT