பெங்களூரு

விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது அரசு தாக்குதல்: ரன்தீப் சிங் சுா்ஜேவாலா குற்றச்சாட்டு

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதா, கா்நாடக அரசின் நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது அரசு கொடூரமான தாக்குதலைத் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை (செப். 26) விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி, கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்கள், கட்டுநா்கள், மனைத் தொழிலில் ஈடுபட்டோரின் நலனுக்காக விவசாயிகளின் நலனை மாநில அரசு விற்பனை செய்துள்ளது.

மத்திய, மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசுகள் விவசாயிகளின் அடிப்படை வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளன. கா்நாடகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீா்குலைத்துள்ளனா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மட்டுமல்லாது, விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளன.

காங்கிரஸ் தேசியத் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஆகியோரின் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான சக்திகளை வீழ்த்துவோம். விவசாயிகளின் நலன் காப்பதற்கு காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும். கா்நாடகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ் துணைநிற்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT