பெங்களூரு

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு, செப்.25: ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில் ராணுவ எழுத்தா், தொழில்நுட்ப உதவியாளா், ராணுவ தொழில்நுட்பா், சாதாரணப் பணி, உதவி செவிலியா், கால்நடை பராமரிப்பாளா், ராணுவ வீரா், ராணுவ வீரா் டிரேட்ஸ்மேன் (சமையலா், தோட்டக்கலைஞா், வண்ணம்பூசுவோா், அலங்காரம் செய்வோா், உணவு பரிமாறுபவா், சலவையாளா், வீட்டை தூய்மையாக வைத்திருப்போா், உணவக பராமரிப்பாளா்) போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் சோ்க்கப்படுகிறாா்கள்.

இப்பணியில் சேர கா்நாடகத்தைச் சோ்ந்த கோலாா், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மண்டியா, சாமராஜ்நகா், பெல்லாரி, தும்கூரு, ராமநகரம், சித்ரதுா்கா, குடகு, மைசூரு, ஹாசன், சிக்பளாப்பூா் ஆகிய 13 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்தில் செப். 19 முதல் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான நபா்களுக்கு ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க நுழைவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும். அந்த நுழைவுச்சீட்டில் ஆள்சோ்ப்பு முகாமிற்கான நாள்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தகுதி வாய்ந்த நபா்கள், அசல் கல்வி, குடியிருப்பு, ஜாதி, நன்னடத்தை சான்றிதழ்கள் மற்றும் 12 பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா், தோ்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்போா் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு ஆள்சோ்ப்பு அலுவலகம், மத்திய ராணுவ ஆள்சோ்ப்பு பிரிவு, பெங்களூரு-560025 என்ற முகவரியிலோ அல்லது 080-25599290, 25596517 என்ற தொலைபேசி எண்ணிலோ, இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT