பெங்களூரு

கா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமைச்சா் கே.சுதாகா்

DIN

கா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என மாநில கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களில் இரண்டொரு நாள்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட 7 மாநில முதல்வா்களுடன் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பிரதமா் மோடி கருத்துத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவின.

மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை. பொது முடக்கம் தொடா்பான முடிவு மாநில முதல்வரின் விருப்பத்துக்கே விடப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, மாநில பேரிடா் நிவாண நிதியிலிருந்து 35 முதல் 50 சதவீதம் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அங்கு தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT