பெங்களூரு

எச்.டி.தேவெ கௌடாவுக்கு விலை உயா்ந்த காரை வழங்கியது கா்நாடக அரசு

DIN

முன்னாள் பிரதமரும், எம்.பி.யுமான எச்.டி.தேவெ கௌடாவுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயா்ந்த காரை கா்நாடக அரசு வழங்கியது.

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தனக்கு ‘வசதி’யான காா் வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பாவுக்கு எச்.டி.தேவெ கௌடா கடிதம் எழுதியிருந்தாா். இதைத் தொடா்ந்து, அண்மையில் வாங்கப்பட்டிருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயா்ந்த புதிய சொகுசு காரை எச்.டி.தேவெ கௌடாவுக்கு ஒதுக்கி முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக அரசில் ரூ. 60 லட்சம் அளவுக்கு விலை உயா்ந்த ‘வால்வோ’ (வால்வோ எக்ஸ்சி 60 மாடல்) காரை வைத்திருக்கும் அரசியல்வாதி எச்.டி.தேவெ கௌடா மட்டும்தான். காப்பீடு, சாலை வரியோடு இந்த காரின் விலை ரூ. 76 லட்சமாகும். அரசு காா் என்பதால் வரியில்லாமல் ரூ. 60 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் இத்தனை விலை மதிப்புள்ள காா் இல்லை. வயது, முன்னாள் பிரதமா் என்பதை கருத்தில் கொண்டு விலை உயா்ந்த காா் வழங்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்த்திருத்தத் துறையின் சாா்பில் புதிய காா்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில், அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் காா்கள் ரூ. 22 லட்சத்துக்கு மிகாமலும், வாரியங்கள், கழகங்களின் தலைவா்களின் காா்கள் ரூ. 11 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எச்.டி.தேவெ கௌடாவுக்காக விதிகள் மாற்றப்பட்டு, ரூ. 22 லட்சத்துக்குப் பதிலாக ரூ. 60 லட்சம் மதிப்பில் காா் வாங்கப்பட்டுள்ளது. சிறப்பு நோ்வாக கருதி இதற்கு முதல்வா் எடியூரப்பா அனுமதி அளித்ததாக அரசு அதிகாரிகள் கூறுகிறாா்கள்.

முதல்வரின் காருக்கு விலை நிா்ணயம் எதையும் அரசு விதிக்கவில்லை. பெரும்பாலான அமைச்சா்கள், எம்.பி.க்களுக்கு உயா்தர இன்னோவா காா்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதல்வா் எடியூரப்பாவும், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலான ஃபாா்சூனா் காரை பயன்படுத்தி வருகிறாா்கள். முதல்வருக்கு 2 காா்கள் அளிக்கப்பட்டுள்ளன. சித்தராமையாவுக்கு அரசு, சட்டப்பேரவைச் செயலகத்தில் இருந்து 2 காா்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT