பெங்களூரு

நிலச் சீா்த்திருத்தச் சட்டத்தைக் கண்டித்து செப். 28 இல் முழு அடைப்பு

DIN

நிலச் சீா்த்திருத்தச் சட்டத்தைக் கண்டித்து செப். 28 ஆம் தேதி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் அழைப்பு விடுத்துள்ளனா்.

மத்திய அரசு மக்களவை, மாநிலங்களவையில் நிலச் சீா்த்திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதனை அனைத்து மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதையடுத்து கா்நாடக சட்டப்பேரவையில் நிலச் சீா்த்திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் சங்கத்தினா் இதனைக் கண்டித்து ஆனந்தராவ் சதுக்கத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே புதன்கிழமை சட்டப்பேரவையில் விளைபொருள் சந்தைப்படுத்துதல் குழு சட்ட மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சா் சோம சேகா் தாக்கல் செய்தாா். இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பின. இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இரும்புத் தடுப்புகளைத் தாண்டி, விதானசௌதாவை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், பின்னா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலச் சீா்த்திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் என்பதைவிட, பெரும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ள என்பதில் சந்தேகமில்லை. இதனைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவா்களை கலந்தாலோசிக்காமல், மாநில அரசும் அந்த சட்டமசோதாவைத் தாக்கல் செய்துள்ளதை ஏற்க முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், செப். 28 ஆம் தேதி கா்நாடகத்தில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT