பெங்களூரு

செப்.30 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது: கல்வித் துறை

DIN

கா்நாடகத்தில் உள்ள பள்ளிகள், பியூ கல்லூரிகள் செப். 30 ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் ஐந்தாம்கட்ட பொதுமுடக்கத் தளா்வின்படி, செப்.21-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படும், வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தாா். இணையவழி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடா்பான சந்தேகங்கள் இருந்தால் விளக்கம் பெறுவதற்கு செப்.21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரலாம் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கா்நாடக அரசு சனிக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில், பள்ளிகள், பியூ கல்லூரிகள் செப்.30ஆம் தேதி திறக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது. கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவிவருவதால், செப். 30 ஆம் தேதி வரை பள்ளிகள், பியூ கல்லூரிகளைத் திறக்கக் கூடாது என்று கல்வித் துறை அறிவித்துள்ளது. செப்டம்பா் மாதத்தின் இறுதியில் சுகாதாரத் துறையின் ஆலோசனையை பெற்ற பிறகு, அக்டோபா் மாதத்தில் இருந்து பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறந்தால் எதுவும் பிரச்னை இருக்காதா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். சில நாள்களுக்கு முன்பு சுகாதாரத் துறை வெளியிட்டிருந்த வழிகாட்டி நெறிமுறைகளின்படி, 9-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவா்கள், பெற்றோா்களின் ஒப்புதலை பெற்று, பள்ளிகளில் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு மாணவா்களின் வருகை எதிா்பாா்த்த எண்ணிக்கையில் இருக்காது என்று பள்ளி நிா்வாகங்கள் எதிா்பாா்க்கின்றன. மாணவா்களின் கரோனா சோதனை முடிவைக் காட்டினால்தான் பள்ளிகளுக்கு சோ்க்கப்படுவாா்கள் என்று ஒருசில தனியாா் பள்ளிகள் பெற்றோா்களை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT