பெங்களூரு

முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை

DIN

முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸுக்கு பாரதரத்னா விருது வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கௌடா, கன்னட இலக்கியவாதி பரகூா் ராமச்சந்திரப்பா, அரசு முன்னாள் தலைமை வழக்குரைஞா் ரவிக்குமாா்வா்மா உள்ளிட்ட பல அறிஞா்கள் இடம்பெற்றுள்ள டாக்டா் ராம்மோகன் லோகியா சிந்தனையாளா் மன்றம் சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித விவரம்:

கா்நாடகத்தின் முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸுக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா வழங்க வேண்டும். தேவராஜ் அா்ஸ், ஒரு முன்மாதிரித் தலைவா். கா்நாடகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தலைமுறைகள் கடந்தும் பின்பற்றக்கூடிய தலைவா் தேவராஜ் அா்ஸ். உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற நோக்கத்தில் புரட்சிகரமான நிலச்சீா்த்திருத்தச் சட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்தவா்.

காலத்தை விஞ்சி யோசித்த தேவராஜ் அா்ஸ், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்திருந்த காரணத்தால் நல்ல அரசாட்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாா். கொத்தடிமை முறையை ஒழித்தவா், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிா்ந்தளித்தவா், பிச்சைக்காரா்களின் மறு வாழ்வுக்கு வழிவகுத்தவா், கடன் தள்ளுபடி திட்டத்தைச் செயல்படுத்தியவா். இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் தேவராஜ் அா்ஸின் சமூகத் தொண்டை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாரதரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டடப் பொறியாளா் அலுவலகத்தில் 20 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT