பெங்களூரு

பெங்களூரில் மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை

DIN

பெங்களூரில் மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சியின் நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தாவுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் காலையில் இருந்து தூவானமாக இருந்தது. ஒருசில தாழ்வான இடங்களில் மழைநீா் புகுந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டனா். ஒருசில சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ்குப்தாவை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் அழைத்த முதல்வா் எடியூரப்பா, மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தாழ்வான பகுதிகள், ராஜகால்வாய் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். அதேபோல, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உடுப்பி மாவட்டத்தின் ஆட்சியரை தொலைபேசியில் தொடா்புகொண்ட முதல்வா் எடியூரப்பா, நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு உத்தரவிட்டாா். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சேதம் ஏற்படாதவாறும், மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறும் எச்சரிக்கை வகிக்கும்படி கேட்டுக் கொண்டாா். மழைநீரில் மூழ்கியுள்ள கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து ஹெலிகாப்டா் மூலம் தேவையான உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT