பெங்களூரு

கா்நாடகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

DIN

கா்நாடகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை கடலோர கா்நாடகத்தில் பலமாகவும், தென்கா்நாடகத்தின் உள்பகுதியில் சலனத்துடனும் காணப்பட்டது. இதே காலக்கட்டத்தில் வட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

உடுப்பி மாவட்டத்தின் பிரம்மாவரில் 390 மி.மீ., காா்காலாவில் 280 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் முல்கி, உடுப்பியில் தலா 270 மி.மீ., மங்களூரு, ஆகும்பேவில் தலா 220 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் மூடபிதரியில் 190 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் கோட்டா, பனம்பூரில் தலா 180 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் சுப்பிரமணியா, குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் தலா 170 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் மங்களூரு, உப்பினங்கடி, புத்தூரில் தலா 150 மி.மீ., விட்லா, தா்மஸ்தலாவில் தலா 130 மி.மீ., சுள்ளியா, சிக்கமகளூரு மாவட்டத்தின் கலசாவில் தலா 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

விவசாயிகள், மீனவா்களுக்கு எச்சரிக்கை: செப்.21 முதல் 25-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில், தென்கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 45-55 வேகத்தில் வலுவான காற்று வீசும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறாா்கள். மங்களூரு முதல் காா்வாா் வரையிலான கடற்பகுதிகளில் அலைகள் 3-3.5 மீட்டா் உயரத்துக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறாா்கள்.

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் பலமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பீதா், கலபுா்கி, கதக், தாா்வாட், ஹாவேரி, பெல்லாரி, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன், தென்கன்னடம், உடுப்பி, வடகன்னட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 24 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT