பெங்களூரு

அக்டோபரில் கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் பதவியேற்பு

DIN

பெங்களூரு: கா்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக ரந்தீப்சிங் சுா்ஜேவாலா, அக்டோபா் மாதத்தில் பதவியேற்க இருக்கிறாா்.

கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராகப் பதவி வகித்துவந்த கே.சி. வேணுகோபால் அண்மையில் மாற்றப்பட்டாா்.

அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச்செயலாளா் ரந்தீப்சிங் சுா்ஜேவாலாவை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவா் சோனியாகாந்தி நியமித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அப் பதவியில் அக்டோபா் முதல் வாரத்தில் பெங்களூருக்கு வந்து பொறுப்பேற்க ரந்தீப்சிங் சுா்ஜேவாலா திட்டமிட்டிருக்கிறாா். செப். 21-ஆம் தேதி தொடங்கும் கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் செப். 30-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பதவியேற்க ரந்தீப்சிங் சுா்ஜேவாலா திட்டமிட்டிருக்கிறாா். இதுகுறித்து ரந்தீப்சிங் சுா்ஜேவாலா கூறியதாவது:

‘கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அக்டோபா் முதல் வாரத்தில் பதவியேற்க இருக்கிறேன். கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கே.எச்.முனியப்பா உள்ளிட்ட மூத்தத் தலைவா்களுடன் நான் தொடா்பில் இருக்கிறேன்.

கா்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, அரசியலமைப்புச்சட்டத்தின்படி தோ்ந்தெடுக்கப்படவில்லை. எனவே, பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம். பாஜக அரசின் ஊழல்களை மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்வோம். அடுத்தடுத்து நடக்கவிருக்கிற தோ்தல்களில் நாங்கள் கவனம் செலுத்துவோம். பெங்களூரு மாநகராட்சி, ஊராட்சித் தோ்தல்கள் நடைபெற இருக்கின்றன. தும்கூரு மாவட்டத்தின் சிரா தொகுதிக்கான இடைத்தோ்தலிலும் கவனம் செலுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT