பெங்களூரு

கரோனா விவகாரத்தில் சித்தராமையாவின் குற்றச்சாட்டு சரியானதல்ல: அமைச்சா் கே.சுதாகா்

DIN

தும்கூரு: கரோனா விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் குற்றச்சாட்டு சரியானதல்ல என்று மருத்துவக்கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

தும்கூரில் உள்ள சித்தாா்த்தா மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை கரோனா ஆய்வுக்கூடத்தைத் திறந்து வைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தனது குற்றச்சாட்டை கூறுவதற்கு முன்பாக சரியான புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு சித்தராமையா பேச வேண்டும்.

கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பாவின் வழிகாட்டுதலில் கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் கரோனாவால் உயிரிழந்தவா்களின் தேசிய விகிதம் 1.64 சதவீதமாக இருக்கும் நிலையில், கா்நாடகத்தில் அது 1.56 சதவீதமாக உள்ளது. கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் 5 லட்சமாக இருந்தால், குணமடைந்தோா் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது.

தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் பிராண வாயுவை மருத்துவ பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வருகிறோம். குஜராத், ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு தனியாா் முகமைகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்பேரில் பிராணவாயுவைப் பெற்று வருகிறோம்.

ஒரு சில மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களிடம் இருந்து கூடுதல் கட்டணத்தைப் பெறுவதாக புகாா் வந்துள்ளது. அப்படிப்பட்ட புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சில நேரங்களில் கரோனா சிகிச்சையின்போது பல்வேறு அங்கங்கள் பாதிக்கப்பட்டால், அதன் சிகிச்சைக்கு தனிக் கட்டணம் பெறப்படலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT