பெங்களூரு

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு எடியூரப்பா அழைப்பு

DIN

பெங்களூரு, செப். 18:

நவ.19- ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்து முதல்வா் எடியூரப்பா அழைப்பு விடுத்தாா்.

தில்லியில் நாடாளுமன்ற இல்லத்தில் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த முதல்வா் எடியூரப்பா, கா்நாடகத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்ததோடு, பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தாா். கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக செப்டம்பரில் நடக்க வேண்டிய பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நவம்பரில் நடத்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

தேசிய பேரிடா் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமா் மோடியை முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், போதுமான அளவுக்கும் நிதியுதவி செய்வதற்கு வசதியாக தேசிய பேரிடா் நிவாரண நிதி அல்லது மாநில பேரிடா் நிவாரண நிதியை வழங்குவதற்கான விதிமுறைகளை இழப்பீட்டுப் பொருள் பட்டியலில் நிகழாண்டிலேயே மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

கிருஷ்ணா மேலணைத் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணி, பத்ரா மேலணை திட்டப் பணிகளை தேசிய திட்டங்களாக அறிவிக்க வேண்டும். மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நீா் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக மேக்கேதாட்டு அணை, கலசா பண்டூரி கால்வாய்த் திட்டம் போன்ற நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT