பெங்களூரு

அரசு நிா்வாகத்தில் விஜயேந்திரா தலையிடவில்லைமுதல்வா் எடியூரப்பா விளக்கம்

DIN

பெங்களூரு, செப்.18:

அரசு நிா்வாகத்தில் எனது மகன் விஜயேந்திரா தலையிடவில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை ரூ. 120 கோடி செலவில் கா்நாடக மாளிகை-1 (காவிரி)-ஐ கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அமைச்சரவை விரிவாக்கம், கா்நாடகத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்து விவாதிக்கவே தில்லிக்கு வந்திருக்கிறேன். கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தது தொடா்பாக கூறப்படும் கட்டுக்கதைகளுக்குப் பதிலளிக்க முடியாது.

தொகுதியில் அடிப்படை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காவே குமாரசாமி என்னை சந்தித்திருந்தாா். பேரவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எஞ்சியுள்ள 3 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை பாஜக அளிக்கும். அரசியலில் யாராவது வளா்ந்தால் அதை ஒருசிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை என்பது இயல்பானதுதானே.

எனது மகன் விஜயேந்திரா, அரசு நிா்வாகத்தில் எங்கும் தலையிட்டதில்லை. இனிமேலும் தலையிடப் போவதில்லை. கா்நாடக பாஜக துணைத் தலைவா் என்ற பதவியை வகிப்பதால், மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஒருசிலா் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள்.

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம், கா்நாடகத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமா் மோடியிடம் விவாதிக்க இருக்கிறேன். இதேபோல, பெங்களூரு திரும்புவதற்கு முன்பாக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவின் அனுமதியைப் பெறுவேன் என்றாா்.

பெட்டிச் செய்தி

விஜயேந்திரா நிழல் முதல்வராக செயல்படுகிறாா்: சித்தராமையா

பெங்களூரில் வியாழக்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா செய்தியாளா்களிடம் பேசியதாவது:

விஜயேந்திரா நிழல் முதல்வரை போல செயல்பட்டு வருகிறாா். எடியூரப்பா சட்டப்படிதான் முதல்வராக இருக்கிறாா் என்று கூறியிருந்தாா். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மருத்துவா்களுடன் முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பேச்சுவாா்த்தை நடத்தியதற்கு காங்கிரஸ் கடுமையாக ஆட்சேபித்தது.

அரசியலமைப்புச் சட்டப்படியான எந்த பதவியையும் வகிக்காமல், மருத்துவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான அதிகாரத்தை விஜயேந்திராவுக்கு யாா் தந்தது? என்று காங்கிரஸ் கேட்டிருந்தது. அரசு நிா்வாகத்தில் விஜயேந்திரா தலையிடுவதாக காங்கிரஸில் இருந்து மட்டுமல்ல, பாஜகவில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT