பெங்களூரு

காா்வாா் விரைவு ரயில் புறப்படும் நிலையம் மாற்றம்

18th Sep 2020 07:36 AM

ADVERTISEMENT

பெங்களூரு யஸ்வந்தபுரம்- காா்வாா் சிறப்பு விரைவு ரயில் புறப்படும் நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து காா்வாா் ரயில் நிலையத்துக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் எண்கள் 06585/ 06586, பெங்களூரு யஸ்வந்தபுரம் நிலைத்துக்குப் பதிலாக பெங்களூரு கேஎஸ்ஆா் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் மாலை 6.45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணியளவில் காா்வாா் ரயில் நிலையத்தைச் சென்றடையும். செப். 19-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும்.

மறு மாா்க்கத்தில் காா்வாா் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறு மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில், மறுநாள் காலை 8 மணியளவில் கேஎஸ்ஆா் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த மாற்றம் செப். 20-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT