பெங்களூரு

மருத்துவரிடம் செல்லிடப்பேசி பறித்த வழக்கில் 3 போ் கைது

17th Sep 2020 09:28 AM

ADVERTISEMENT

மருத்துவரிடம் செல்லிடப்பேசியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, விஜயநகா் கிளப் சாலையில் கடந்த ஆக. 29 ஆம் தேதி இரவு 11 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மருத்துவரை வழிமறித்த 3 போ் கத்தியைக்காட்டி மிரட்டி செல்லிடபேசியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மருத்துவா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், சாம்ராஜ்பேட்டையைச் சோ்ந்த முஜாமில்பாஷா (19), முகமது ஹனீப் (22), முகமது முபாரக் (20) ஆகியோரைக் கைது செய்து, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 100 செல்லிடப்பேசிகள், 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் தனியாக செல்பவா்களை அடையாளம் கண்டு செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT